இந்தியா முழுவதும் ஒரு மணி நேர சுத்தம் செய்யும் திட்டம்

0
217

அரசியல் தலைவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் நேற்று (01) இந்தியா முழுவதும் ஒரு மணி நேர சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றனர்.

காந்தி ஜெயந்திக்கு முன்பு நடைபெற்ற இந்த தூய்மைப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்களித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் முன்னணியில் இருந்து தலைமை தாங்கினார்.

Cleaning program across India

அதன்படி இது தொடர்பில் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ X (Twitter) கணக்கில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தை இணைக்கிறோம்.” என குறித்த பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் மோடியைத் தவிர அமைச்சர்கள் உட்பட பல பாஜக தலைவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Cleaning program across India