ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

0
576

ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பவுஸர் வாகனத்திற்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய நபர் ஒருவரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.