ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த ஏமாற்றம்: திடீரென ஓய்வை அறிவித்த இந்திய வீராங்கனை

0
144

ஒலிம்பிக் இறுதிப் போட்டியின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் அவர் தனது ஓய்வை அறிவித்தார்.

வினேஷ் டுவிட்டர் பதிவின் மூலம் தனது தாயிடம் மன்னிப்பு கோரியிருந்தார், “மேலும் மல்யுத்தம் வெற்றி பெற்றதாகவும், எனினும், தான் அதில் தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கனவுகள், என் பலம், அனைத்தும் சிதைந்துவிட்டன, மேலும் என்னிடம் பலம் இல்லை.” ஆகவே, தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த போட்டியில் வினேஷ் போகத், கியூபா வீராங்கனையான குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி விட்டது.

எனினும், இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக குறிப்பிட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.