மின்னல் தாக்கி முதியவர் பலி!

0
164

அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் 65 வயதுடைய கெகெலான, கொட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.