அலுவலக ரயில்கள் ரத்து!

0
110

இன்று காலை 11 அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாத்துவ, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை மற்றும் ராகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பயணங்களும் அந்த ரயில் நிலையங்களில் இருந்து மீண்டும் கோட்டை ரயில் நிலையங்களுக்குச் செல்லும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.