அதிவேக வீதியில் உணவு உட்கொண்ட NPPயின் ஆதரவாளர்கள்; ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

0
42

காலி முகத்திடலில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் பேருந்துகள் அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு உணவு உட்கொண்டது தொடர்பாக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்ததாகவும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்துகளின் ஏற்பாட்டாளர்களின் பட்டியலை தான் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.