மீண்டும் சாதாரண தரப் பரீட்சை..! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0
231

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி தற்போது பரவி வருகின்றது.

சமீப நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், அவ்வாறு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் இவ்வாறான பரீட்சை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் சாதாரண தரப் பரீட்சையா? பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! | Ordinary Level Exam Again Department Examinations

எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று தெரிவிக்கப்படுகிறது.