இலங்கைக்கு உதவியதில் அரசியல் நிபந்தனை இல்லை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

0
55

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது, வழங்கிய ஆதரவில் எந்தவொரு அரசியல் நிபந்தனைகளும் இல்லை என என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தியா தனது அயல் நாட்டின் அரசியல் சூழலை கட்டுப்படுத்த எதிர்ப்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் அரசியல் மாற்றங்கள் நாட்டின் குடிமக்களால் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை அரசியலில் ஏற்படுவதை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற கேள்விக்ககு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நியுயோர்க் நகரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ். ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அயல்நாடான இலங்கை மிக ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் வேறு எவரும் உதவி செய்யாத சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியதாகவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு உதவ வாய்ப்பு கிடைத்தமை தெடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவசியமான நேரத்தில் 4.5 பில்லியன் டொலர் ரூபாயை வழங்கி இலங்கை பொருளாதாரத்திற்கு உதவியதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.