அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கும் 50 சதவீத வாக்குகள் பெறாது – அகிலவிராஜ் காரியவசம்

0
244

அடுத்து நடைபெறும் தேர்தல் எதுவாக இருந்தாலும் எந்த கட்சிக்கும் 50 சத வீத வாக்குகளை பெற முடியாது என ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதியின் அதிகார சபைக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய நேரத்தில் அவசியமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

நாட்டின் பணவீக்கம் தற்போது தனி இலக்கத்திற்கு வந்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு இதனை விட பல நிவாரணங்கள் கிடைக்கும் எனவும் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.