வெளிநாடு சென்ற நிஹால் தல்துவ: பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர

0
148

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பணியாற்றிய நிஹால் தல்துவ தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதன் காரணமாக பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நாடு திரும்பியதன் பின்னர் அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.