இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்குப் புத்துயிரூட்ட முயற்சித்ததற்காகவும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரிலும் 10 இலங்கையர்கள் மற்றும் மூன்று இந்தியர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகாம் (NIA) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக கடந்த வியாழன் அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகஸ்தர் ஹாஜி சலீமுடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான சின்னையா குணசேகரன் எனப்படும் கிம்புலா அலே குணா மற்றும் புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா ஆகியோரும் இவர்களுள் உள்ளடங்குவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொஹமட் அஸ்மின், அழகப்பெருமவின் சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கெனடி பெர்னாண்டோ, தனுக ரொஷான், லடியா, வெல்லா சுரங்க, திலீபன் மற்றும் தனரத்ன நிலுக்ஷன் ஆகிய எட்டு இலங்கை பிரதிவாதிகளும் இந்திய தேசிய புலனாய்வு முகமையால் வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தியர்கள் மற்றும் அவர்கள் செல்வகுமார் எம். விக்கி என்கிற விக்னேஷ்வர பெருமாள் மற்றும் அய்யப்பன் நந்து போன்றோர் பிரதிவாதிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் இந்தியர்கள் என இந்திய தேசிய புலனாய்வு (NIA) அறிக்கை கூறுகிறது.
இந்த சந்தேக நபர்களில், விக்கி மற்றும் அய்யப்பன் நந்து இந்த ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர், மற்றவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.