அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் – ஜனாதிபதி

0
188

அடுத்து ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத தமிழர் பேரவை பிரதிநிதிகளிடம் அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (07) சந்தித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதுடன் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும் அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதே எனது யோசனை.

தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஆனால் பொருளாதார நெருக்கடியின்போது எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்தாகவும் வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.