விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோரை இளமையாக காட்ட டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாறினார்.
பொலிஸ் அதிகாரியாக விடுதலை படத்தில் நடித்திருந்த இவர், தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்தார். விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகி வசூலை அள்ளியது.
இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் படத்தில் வரும் பிளேஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் கதாபாத்திரம் 1960 காலகட்டத்தில் அமைக்கப்படவுள்ளதால் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருவரையும் இளமையாக காட்ட இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.
சூரியின் கதாபாத்திரம் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.