ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய புதிய ஜனாதிபதி: தரவரிசையிலும் முன்னேற்றம்

0
100

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். முகப்புத்தகத்தில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாண்டிய ஆறாவது இலங்கை அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 1.4 மில்லியன் முகப்புத்தக பின்தொடர்பவர்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதியாக உள்ளார். மேலும் முகப்புத்தகத்தில் ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களைத் தாண்டிய அரசியல் வாதிகள்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – 1 மில்லியன்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – 1.1 மில்லியன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 1.3 மில்லியன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க – 1.2 மில்லியன்