தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளர் தான் இலங்கைப் பெண்ணான லாஸ்லியா.
பிக்பாஸ் வீட்டில் செல்லப்பிள்ளையாக சுற்றித்திரிந்த லாஸ்லியா இறுதிச்சுற்று வரை பங்குபற்றி வெளியேறினர்.
இந்த நிலையில் பிக்பாஸை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்களை பெற்றார்.

குறிப்பாக இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஃப்ரண்ட்ஷிப் படத்திலும் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சமூகவலைதளத்தில் அக்டிவாக இருந்துவரும் லாஸ்லியா தனது லேட்டஸ்டான புகைப்படங்களை எப்போதும் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது நீல நிற குட்டைபாவாடையில் புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லாஸ்லியாவின் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.