இலங்கையில் புதிய அரசாங்கம்; இரு ஆளுநர்கள் பதவி இராஜினாமா

0
174

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில் இரு ஆளுநர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரே தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதேவேளை பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக இ ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.