எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அரசாங்கத்திற்கு எதிராக அமைக்கப்பட உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாகவும் புதிய ஆண்டில் கூட்டணி ஆரம்பிக்கப்படும் எனவும் உத்தர லங்கா சபாகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமான சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடத்தப்பட்டுள்ளதுடன் அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான இந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவே முன்னின்று செயற்பட்டுள்ளார்.
உத்தர லங்கா சபாகய, சுதந்திர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தைகளில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை தவிர அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் போனால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும் கூட்டணியின் தலைவராக ஒருவரை நியமிப்பது உள்ளிட்ட கூட்டணியின் உள்விவகாரங்கள் குறித்த முக்கியமான பேச்சவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.