நெடுந்தீவு கொடூர கொலை சம்பவம்; சிகிச்சை பெற்றுவந்த 100 வயது மூதாட்டியும் நேற்று உயிரிழப்பு..

0
232
Dead body in a mortuary

யாழ் நெடுந்தீவில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில்100 வயது மூதாட்டியான பூரணம் என்பவர்  இன்றைய தினம் (27-04-2023) வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது கடந்த சனிக்கிழமை (22-04-2023) அதிகாலை நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.

நெடுந்தீவு கொடூர கொலை சம்பவம்: சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியும் உயிரிழப்பு | Jaffna Neduntheevu Muder Old Woman Treated Died
நெடுந்தீவு கொடூர கொலை சம்பவம்: சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டியும் உயிரிழப்பு | Jaffna Neduntheevu Muder Old Woman Treated Died

100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த தாக்குதலின் போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.