மகன்களுடன் முச்சக்கர வண்டியில் சென்ற நயன்தாரா: இணையத்தினை கலக்கும் வீடியோ

0
135

நடிகை நயன்தாரா தன் இரட்டை மகன்களுடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் காணொளியை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 10 கோடி ரூபாவுக்கு மேல் ஒரு படத்திற்கு நடிகை நயன்தாரா சம்பளமாக பெறுகின்றார்.

தன் வீட்டில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருக்கும் நிலையில் மகன்களுடன் சென்னை சூட்டில் முச்சக்கரவண்டியில் சென்றிருக்கிறார். மாலையானால் மகன்களுடன் முச்சக்கரவண்டியில் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன தான் கோடி, கோடியாக பணம் இருந்தாலும் எளிமையாக வாழ்வதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். விக்னேஷ் சிவனும் முடிந்த அளவுக்கு பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.