நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமனம்

0
212

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக முன்னர் கடமையாற்றிய திகிரி கொப்பேகடுவ, அண்மையில் இராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த ஆளுநர் பதவி நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

அதேவேளை நவீன் திஸாநாயக்க 2020 ஆம் ஆண்டு வரை 20 வருடங்களாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இறுதியாக அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.