அரச வெசாக் வைபவம் இவ்வாண்டு நுவரெலியா மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக தேசிய வெசாக் வாரம் மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
‘நல்லொழுக்கமுள்ள மற்றும் உன்னதமான நண்பர்களுடன் நட்புகொள்ளல்’ (“Bhajetha Mitte Kalyane”) எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு அரச வெசாக் வைபவம் நடைபெறவுள்ளது.
அரச வெசாக் வைபவம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பௌத்த மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் இவ்வாண்டு அரச வெசாக் வைபவம் அனைத்து இன மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.