இலங்கை பொதுத் தேர்தலில் 9 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!

0
112

இலங்கையில் நடைபெற்று முடிந்த 10அவது நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

பொதுத் தேர்தலில் இதுவரையில் தேசிய மக்கள் சக்தி 5 மில்லியனுக்கு மேலான வாக்குகளுடன் 44 ஆசனங்களை கைப்பற்றிள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் 1.5 மில்லியன் வாக்குக்ளுடன் 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 2 ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. தற்போதைய நிலவரத்தின்படி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.