நஸீர் அஹமட் ‘அவமானச் சின்னம்’ – கட்சியின் உயர்பீடம் எடுக்கவுள்ள நடவடிக்கை

0
470

சுற்றாடல் துறை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம்களை அணிதிரட்டுவது இனி மேலும் சாத்தியப்படாது" - ஹாபிஸ் நசீர் அஹமட் -  Ceylon East | #1 News Website form Sri Lanka 24x7 updates Online Breaking  News | Tamil
நஸீர் அஹமட்

இலங்கை முழுவதும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை நஸீர் அஹமட் மீண்டுமொரு தடவை மீறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமையானது மிகவும் அசிங்கமானது என தெரிவித்த ரவூப் ஹக்ஹீம், கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என மேலும் தெரிவித்துள்ளார்.