எம்பி பதவியை இழந்த அரசின் சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தும் நசீர் அகமது

0
186

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பயன்படுத்திய இரண்டு அதிசொகுசு ஜீப்களை மீள கையளிக்காது தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

20 கோடி ரூபா பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும் அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களாகும்.

இவ்விரு வாகனங்களும் மீள ஒப்படைக்கப்படாதமை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் அவருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என பதிலளித்துள்ளார். ஆனால் இந்த வாகனங்கள் இதுவரை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.