பிரபல பின்னணி பாடகி சித்ரா, தனது மகள் நந்தனாவின் பிறந்தநாளையொட்டி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளவர் கே.எஸ்.சித்ரா (60). சித்ரா மற்றும் அவரது கணவர் விஜயசங்கருக்கு நந்தனா (8) என்ற மகள் இருந்தார்.
நந்தனா டெளன் நோய்க்கூட்டறிகுறி எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2011ல் டுபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா உயிரிழந்தார். நேற்று சித்ரா மகள் நந்தனாவின் பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து சமூகவலைதளத்தில் சித்ரா வெளியிட்ட பதிவில், ”நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது.
நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” என்று பதிவிட்டுள்ளார்.
