வவுனியா மாவட்ட சித்திரைக் கலை விழாவில் இருந்து வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட கலாசார பேரவை இணைந்து நகரசபை மைதானத்தில் 04ஆம் 05 திகதி சித்திரைக் கலை விழா நிகழ்வை நடத்தின.
இதன்போது, முன்தினம் காலை அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த காட்சிக் கூடம் ஒன்றில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் வைக்கப்பட்டு அதன் பெயர் பொறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புதூர் நாகதம்பிரான் மற்றும் புத்தர் சிலை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சித்திரைர கலை விழாவில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கஸ்வரர் என ஊடகங்களில் செய்தியும் வெளியாகி இருந்தன.
இருப்பினும் மாலை குறித்த ஆதி லிங்கேஸ்வரரை பார்வையிட சென்ற பலரும் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். வர்ணப் பூச்சு மூலம் ஆதி லிங்கேஸ்வரரின் பெயர் அழிக்கப்பட்டு வெறும் லிங்கம் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, உயர்மட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த பெயர் நீக்கப்பட்டதாக அங்கு கடமையில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

