செலுத்தப்படாத நாமல் ராஜபக்சவின் திருமண மின்கட்டணம்!!

0
210

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொண்டு தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட செலுத்தப்படாத மின்சார கட்டணத்தின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

செலுத்தப்படாத திருமண மின்கட்டணம்: சர்ச்சையில் சிக்கிய நாமல் ராஜபக்ச! | Namal Rajapaksa Unpaid Wedding Electricity Bill

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மின்சார சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

வீரகெட்டிய இல்லத்தில் 12-09-2019 முதல் 15-09-2019 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக மின் உற்பத்திக்கான இயந்திரங்களை வழங்குவதற்காக 26 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இருப்பினும், 26 லட்சம் ரூபாய் நிலுவை மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தமக்கோ அல்லது தனது தந்தைக்கோ இதுவரை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருமண விழாவுக்கான அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Gallery Gallery