நாட்டு மக்களுக்காக அழும் நாமல் ராஜபக்ஷ!

0
54

அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறுபிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது சமூகவலைத் தளத்தில்,

நாட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் சேதமடைந்துள்ளன, குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன, குழந்தைகளுக்கு உணவோ சுத்தமான நீரோ இல்லை. பலர் தற்காலிக முகாம்களில் வாழ்கிறார்கள், சிலர் வெள்ள நீரில் நாளுக்கு நாள் நடந்து செல்கிறார்கள். மழை குறைந்த பின்னரும் வீடுகள் கிடைப்பது உறுதி இல்லை.

எனவே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளேன். நாட்டின் 25 மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் கால தாமதம் செய்ய கூடாது. ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பான நிலைக்கு மாறும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டும். இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் ஒவ்வொரு வாரமும் கூட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.