இலங்கை வீரர்கள் வெற்றி பெற்றதற்கு நாமல் தான் காரணம்!

0
567

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இருப்பதாக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வீரர்கள்  வென்றமைக்கு நாமலே  காரணமாம்! | We Are The Reason Why The Sri Lankan Players Won

அத்துடன் அரசியலின்றி திறமையானவர்களுக்கு விளையாட்டை முன்னெடுப்பதில் நாமல் ராஜபக்ச பெரும் பங்காற்றினார் என்றும் மதுர விதானகே கூறினார்.

எனவே நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது எனவும் மதுர விதானகே எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.