மஞ்சள் பூ அலங்காரம் கண்ணை பறிக்க நீல மயிலில் காட்சியளிக்கும் நல்லூரான்

0
215

தமிழர்கள் செறிந்து வாழும் யாழ். நல்லூரில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக எழுந்தருளி நிற்கிறது நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.

இத்தனை சிறப்பு மிக்க ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் 16ம் நாளான இன்று (05.09.2023) மாலை கார்த்திகை உற்சவம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நல்லூரான் நீல மயில் மீதேறி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.