நாக சைதன்யாவுக்கு 2வது திருமணம்: காட்டுத்தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

0
109

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாக சைதன்யா இதனை உறுதி செய்துள்ளார். மிக விரைவில் திருமண செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா அறிமுகமான ஹே மாய சேசாவே (விண்ணைத்தாண்டி வருவாயா) படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யா அவரை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சமந்தா நடித்து வந்த நிலையில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

நாக சைதன்யா மற்றும் சமந்தா தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருவரது பிரிவுக்கும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இது தொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.