“நான் ரெடி தான் வரவா” மகளுடன் நடனமாடிய தேவதர்ஷினி: பட்டைய கிளப்பும் காணொளி

0
153

“நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு மகளுடன் இணைந்து தேவதர்ஷினி நடனமாடிய காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

பிரபல நடிகை தேவதர்ஷினி விடாத கருப்பு, ரமணி vs ரமணி, எதுவும் நடக்கும், அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள் மற்றும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 2 போன்ற பல வெற்றிகரமான நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஆவார்.

நாடகங்களில் நடித்து வந்த காலகட்டத்திலேயே தன்னுடன் நடித்து வந்த சக நடிகரான பிரபல நடிகர் சேத்தனை 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அன்று தொடங்கி இன்று வரை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

இறுதியாக தமிழில் இந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் தேவதர்ஷினி “லியோ” படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி தான் வரவா” பாடலுக்கு மகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

தனது மகளுடன் இருக்கும் தளபதி ரசிகர்களும் லியோ திரைப்பட ரசிகர்களும் தன்னை மன்னிக்க வேண்டும் என்று அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.