தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
சிவகார்த்திகேயன் தனது உறவுக்கார பெண் ஆர்த்தி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். இன்று சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியின் 13 ஆம் ஆண்டு திருமண நாள் ஆகும்.
இதையடுத்து மனைவியுடன் எடுத்து கொண்ட ரொமண்டிக்கான புகைப்படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என் சந்தோஷ கண்ணீரே, நமக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.




