ஆபரணங்களுக்காக வயோதிப பெண் கொலை: தலவாக்கலையில் சம்பவம்

0
741

தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற பகுதியில் 84 வயதான வயோதிப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, அவரது தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண், வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.