சட்டவிரோத பயணத்தால் முல்லைத்தீவு பெண் கைது!

0
95

சட்டவிரோதமாக இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜிதா (45) என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேசு என்பவரை அணுகி 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து இலங்கைக்கு வர முயன்றுள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) இரவு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக நின்ற விஜிதாவையும், இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப உதவிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளாந்தம் மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.