குருந்தூர் மலை மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரங்களில் போன்றவற்றில் முக்கியமான தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
இவ்வாறான நிலையில் இவரின் தீர்ப்பு தொடர்பில் அவருக்கு கீழ் பணிபுரிந்த நபரொருவர் முகநூலில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு இதோ…
கிழக்கு மாகாண அக்கறைக்பற்று நீதிமன்ற நீதிவான் ஆக கடமை புரிந்த காலப்பகுதியில் நீங்கள் வழங்கும் சாதாரண கட்டளைகளில் கூட ஓர் எழுத்தோ அல்லது வசனத்தையோ தவறுதலாக விட்டால் கூட நீதிமன்ற பணியாளர்களாக தட்டெழுத்தாளர்களை/சுருக்கொழுத்தாளர்களை கண்டித்து பல விளக்கம் கோரல் கடிதங்களை அவர்களது தனிக்கோப்புகளில் ( personal file) இட்டு நீதிபதி எனும் கடமையை துளியளவும் தளராமல் முழு விசுவாசித்து வந்தவர் நீங்கள் என்பதனை உங்களின் கீழ் பணியாற்றியவன் என்ற வகையில் நான் நன்கு அறிந்தவன்.
இருப்பினும் உங்கள் கட்டளையில் தீயாக தீபத்தைப் பற்றிய இந்த பதிவு ஒட்டு மொத்த தமிழினதிற்கும் ஓர் சாட்சியமாக அமையும் என Sivajanam Jeyakumar என்பவர் பதிவிட்டுள்ளார்.
