குடிமகன்கள் அடிதடியில் இரண்டான எம்.பி சாணக்கியன் சகோதரனின் மதுபானசாலை

0
63

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைந்துள்ள மதுபானசாலையில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று (22) மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் 45, 47, 37 வயதுடைய மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 20, 25 வயதுகளையுடைய இருவரை மூதூர் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இத்தாக்குதலில் காயமடைந்த மூன்று பேரும் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.   

குடிமகன்கள் அடிதடியில் இரண்டான மதுபானசாலை | Beating At The Liquor Store Muthur