பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களைச் சபைக்குச் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கோரிக்கையை சபாநாயகரிடம் அவர் நேற்று விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,
பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்குத் தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்து வருகின்றார்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததன் பிற்பாடு அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்களை இந்த சபைக்குச் சமர்ப்பிக்குமாறு கோருகின்றேன் என கோரியுள்ளார்.