சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக ஹெரோயின் கொண்டு சென்ற தாய்!

0
250

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மகனுக்காக தாய் ஒருவர் போதை பொருள் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதனால் அத் தாயார் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் உள்ள மகனை பார்வையிட சென்ற தாய் செய்த செயல் | Act Of A Mother Visiting Her Son In Prison

அத்தோடு கைதாகிய அப் பெண் களுத்துறை விலேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

தன்னுடைய மகனை பார்ப்பதற்காக காற்சட்டையொன்றை அத் தாயார் எடுத்து சென்றுள்ளார்.

மேலும் சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது அதில் 5 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.