எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் போட்டியிடுவதாக அறியக் கிடைத்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழலில், வேட்புமனுவை எதிர்ப்பார்த்து காத்திருந்தும் கிடைக்காத சிலர் மனஸ்தாபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மற்றும் அதற்கு முன்னர் அதிகளவில் கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் சிலர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்து காத்திருந்துள்ளனர்.
எனினும், ஒரு கட்சியிலிருந்து போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டதையடுத்து கோரிக்கைகள் அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அநேகமானோருக்கு அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அதிகளவானோர் மனஸ்தாபத்தில் உள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கட்சிக்குள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12 மணி வரையில் வேட்புமனு சமர்பிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தகக்து.