மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் நேற்று (04) இரவு திடீரென சுகவீனமடைந்து மொரட்டுவ பகுதியில் உள்ள தற்காலிக விடுதி அறையில் உயிரிழந்துள்ளார்.
கட்டிடக்கலை பீடத்தின் இறுதியாண்டு மாணவரான இவர், பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த சதாசிவம் வினோத் என்ற மாணவனே இவ்வாறு ளஉயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் விடுதிக்கு அருகில் உள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு விடுதிக்கு திரும்பிய மாணவன், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.