இங்கிலாந்து சென்றும் இந்திய தேநீர் தேடிச்சென்று குடித்த மோடி; இணையத்தில் வைரல்

0
49

இங்கிலாந்துக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஒரு தேநீர் கடையில் இந்திய தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீரை குடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும், ‘செக்கர்ஸ்’ என்ற தேநீர் கடையில் தேநீர் கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முனைவோர் அகில் படேல் என்பவர் தேநீர் கடையிலேயே இரு நாட்டு பிரதம்மர்களும் தேநீர் அருந்தினர்.

இரு தலைவர்களும் தனது கடைக்கு வந்ததும் அகில் படேல் உற்சாகத்துடன் தனது தேநீர் குறித்து விளக்கினார். தனது கடையில் தயாரிக்கப்படும் தேயிலை இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதோடு தேநீர் தயாரிக்கும் முறையையும் அவர்களிடம் கூறி “தேயிலை அசாமில் இருந்தும் மசாலாப் பொருட்கள் கேரளாவில் இருந்தும் வருகின்றன” என்று எடுத்துரைத்தார்.

அதன் பிறகு இரு தலைவர்களுக்கும் அவர் தேநீர் கொடுக்க இருவரும் தேநீரை சுவைத்து சாப்பிட்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

இந்நிலையில் மோடி தேநீரை குடித்த புகைப்படம் வைரலான நிலையில் ஒரு காலத்தில் டீ விற்பனையாளராக இருந்த மோடிக்கு தற்போது ஒரு டீ விற்பனையாளரே தேநீர் கொடுக்கிறார் என்ற கமெண்ட்ஸ் பதிவாகியுள்ளது.