இலங்கையில் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த ஒரு குழுவை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளும் நடமாடும் சேவை நேற்று (12) தெனியாயவில் நடைபெற்றது.
இந்த திட்டத்தில் 500 பேர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது குழந்தைகள் பெற்று கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அதேவேளை இதுபோன்ற பல குடும்பங்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகள் எனபனவும் இந்த நடமாடும் சேவையில் வழங்கப்பட்டன.
