இந்தோனேசியாவில், வேலைக்கு புறப்பட்ட நண்பரைக் காணாமல் திகைத்த ஒரு கூட்டம் இளைஞர்கள், கடைசியில் அவரை ஒரு மலைப்பாம்பின் வயிற்றுக்குள் கண்டு பிடிக்க நேர்ந்தது.
இந்தோனேசியாவில் வேலைக்குப் புறப்பட்ட அக்பர் (Akbar Salubiro, 25) என்பவர் வீட்டுக்குத் திரும்பாததால் அவரது நண்பர்கள் அவரைத் தீவிரமாகத் தேடத் துவங்கியுள்ளனர்.
எங்கெங்கோ தேடியும் அக்பர் கிடைக்காத நிலையில், அவரது வீட்டின் பின்னால் வயிறு வீங்கிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை சிலர் கவனித்துள்ளனர்.
அதிரவைத்த காட்சி
உடனடியாக அங்கு திரண்ட அந்த கிராமத்தினர், அந்த பாம்பின் வயிற்றைக் கீறியுள்ளனர். அவர்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அந்த 213 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றுக்குள் அக்பரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட அக்பரின் உடலைக் கண்ட மக்கள் அதிர்ச்சியும் துக்கமும் அடைந்துள்ளனர்.

எப்படி அந்த மலைப்பாம்பு அக்பரை உயிருடன் விழுங்கியது என்பது தெரியாத நிலையில், அது அவரை பின்புறமிருந்து தாக்கியிருக்கலாம் என அவரது நண்பர்கள் கருதுகிறார்கள்.
சிலவகை மலைப்பாம்புகள், தங்கள் இரையைச் சுற்றி தன் உடலால் இறுக்கிக் கொன்று, பின் அதை விழுங்குவதுண்டு. அக்பரின் கதியும் அப்படி முடிந்ததா என்பது தெரியவில்லை.
