மிஸ் எர்த் – 2023 போட்டி: அல்பேனியாவைச் சேர்ந்த டிரிடா ஜிரி முடி சூட்டப்பட்டார்

0
144

கடந்த சில நாட்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மிஸ் எர்த் – 2023 போட்டி நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான மிஸ் எர்த் ஆக மிஸ் எர்த் பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த டிரிடா ஜிரி முடிசூட்டப்பட்டார்.

தொடர்ந்து மிஸ் எர்த் ஃபயர் பட்டத்தை மிஸ் தாய்லாந்து வென்றார். மிஸ் எர்த் ஏர் கிரீடத்தை பிலிப்பைன்ஸ் அழகியும், மிஸ் எர்த் வாட்டர் கிரீடத்தை மிஸ் வியட்நாமும் வென்றனர். வியட்நாமிய அழகி சிறந்த தேசிய உடைக்கான விருதையும் வென்றார்.

Oruvan

வியட்நாமில் வெகு போலாகலமாக நடைபெற்ற குறித்த போட்டி நவம்பர் 29ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. டிசம்பர் 22 வரை பல்வேறு போட்டி பிரிவுகளின் கீழ் இடம்பெற்று நேற்றைய தினம் இறுதி போட்டியும் இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டு மிஸ் எர்த் – 2023 க்காக இலங்கையை பிரதிபளிக்கும் விதமாக வியன்னா பீட்டர்ஸ் கலந்துகொண்டிருந்தார்.

பிரேசில், கஜகஸ்தான், நெதர்லாந்து, ரஷ்யா, இந்தோனேஷியா, புவேர்ட்டோ ரிக்கோ, தென்னாப்பிரிக்கா, வெனிசுலா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, இங்கிலாந்து, இந்தியா, மொரிஷியஸ், அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய அழகிகள் முதல் 20 இடங்களை பிடித்திருந்தனர்.

இதன்போது போட்டியில் வெற்றிவாகை சூடிய அழகி கருத்து தெரிவிக்கையில்,

“அழகான மற்றும் பல்வேறு வகையான விலங்கினங்களைக் கொண்டாடுவதற்கும் பாதுகாப்பதற்கும் நமது கிரகத்தின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் வருடாந்திர சர்வதேசப் போட்டியாக இது அமைந்தது“ என குறிப்பிட்டார். மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் போன்ற உலகின் நான்கு முக்கிய சர்வதேச அழகுப் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

Oruvan
Oruvan