O/L, A/L மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

0
114

எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.