விமான நிலைய விசா விவகாரம் குறித்து அமைச்சர் விளக்கம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஏற்கின்றன

0
95

விமான நிலையத்தில் விசா வழங்கும் ஒப்பந்த விவகாரத்தில் உரிய கேள்வி மனுக்கோரல் (Tender) செயல்முறையை பின்பற்றாத குற்றச்சாட்டு தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பதிலளித்துள்ளார்.

“பல்வேறு நாடுகளில் இ-விசா (e-visa) செயலாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இவை மட்டுமே அதனால் அவற்றுக்கு உரிய கேள்வி மனு அழைப்பதற்கான தேவை இல்லை.

பிரேரணை வந்தவுடன் அதனை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

விசாவுக்காக வசூலிக்கப்பட்டும் கட்டணம், அரசாங்கத்திடமே திரும்ப வழங்கப்படும். முன்னதாக இந்த விசா விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சிகள் கூட நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை அப்போது ஏற்றுக் கொண்டிருந்தன. இந்த நிறுவனம் அவர்கள் வழங்கும் சேவைகளுக்கான மேலதிக கட்டணங்களை மட்டுமே பெறும்.

எதிர்வரும் திங்கட்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடாத்தி சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கையாள்வேன்” என்றும் அவர் கூறினார்.