தனக்கு அமைச்சு பதவிகள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கோரி்க்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாமல் விடுத்துள்ளார். சமகால அரசாங்கத்தில் தான் எவ்வித அமைச்சு பதவிகளையும் ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.