ஆலயங்களில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் 

0
105

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் நேற்று காலை முதல் மருத்துநீர் வழங்கப்பட்டன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் ஆசியுடன் ஆலய வண்ணக்குமார்களினால் இந்த மருத்துநீர் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து மருத்துநீர் பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.