மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நாளை செப்டம்பர் 7ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நுவரெலியா, வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் வெளியிடப்பட உள்ளதாக அரங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேஷ்குமார் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள பிரஜைகள் எனும் தலைப்பில் தேசிய, மலையக விடயப்பரப்புகளை உள்ளடக்கியதான இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று மொழிகளிலும் உள்ளடக்கங்ளைக் கொண்டுள்ளது.
மலையக மண்ணில் இடம்பெறும் வெளியீட்டை அடுத்து 9 ஆம் திகதி கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் பகிரங்க விவாத மேடையிலும், 10 ஆம் திகதி அரசாங்க ஊடகத் தகவல் நிலையத்தில் இருந்து நேரலையாக நாட்டு மக்களுக்கும் திலகரினால் இந்த கொள்கை பிரடகனம் முன்வைக்கப்படும் எனவும் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
